: $; வள்ளுவச் சொல்லமுதம் விறந்த கோபத்தால் இழந்து திரிவான். பொருனாசை மிக்க உலோபிகன் தாமும் உண்ணுர்; பிறர்க்கும் உதவார். அவர்களுடைய பெருஞ்செல்வத்தைக் கன்வரும் கொடி யரும் எளிதாகக் கவர்ந்து செல்வர். அப்போது உலோபிகள் அனைத்தும் இழந்து உழல்வர். ஆதலின் வரம்பிகந்த கோபமும் உலோபமும் பெருங்குற்றறமாகப் பேசப்பட்டன. - அந்தணர், சான்ருேர், அருந்தவத்தோர், பெற்ருேர், தம்முன்ஞேர் ஆகியோர்க்குப் பணிந்து வணங்குதல் அறிவுடையார் இயல்பு. இன்ளுேரை வணங்குதல், தம் பெருமைக்கு இழுக்கு என்று எண்ணுவதே மாண் பிறந்த மானமாகும். ஒருவன் செய்ய எண்ணிய சிறந்த செயலேத் திண்ணமுறச் செய்து முடித்தல் மாண்புடைய மானத்தைக் காப்பதாகும். தகாத செயலொன்றைச் செய்யக்கருதி, அதனை முடித்தேவிடுவன் என்று முனைந்து நிற்றலும் குற்றமுடைய மானமாகக் கொள்ளப்படும். துரியோதனன் தன் உடன்பிறந்தார்களாகிய பாண்டவர் அரசினே வஞ்சகமாகக் கவர்ந்து கொள்ளக் கருதினுன். எவ்விதத்தினும் பாண்டவரை நாட்டைவிட்டுத் துரத்த வேண்டும் என்ற தீய கருத்தால் சூதாடத் தொடங்கிஞன். அவன் மேற்கொண்ட செயலில் வெற்றி கண்டாகுயினும் இறுதியில் எல்லாம் இழந்து பாரதப்போரில் உயிர் நீத்தா னன்ருே இத் துரியோதனனது செயலும் மாண்பிறந்த மானத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். * எளியார்க்கு அருளுடன் உதவி மகிழ்தலும் வலி யாருடன் பொருத போரில் வெற்றி கண்டு மகிழ்தலும் மாணுற்ற உவகையாகும். தக்கவரல்லாரிடத்துக் காட்டும் கழிகண்ணுேட்டமே மாணு உவகையெனப்படும். பாரி
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/98
Appearance