அசனும் உரனும் 99 யெடுக்குங்கால் தம் உரிமை, பொருள் முதலிய வற்றைப் பிறர் கவர்ந்துகொள்ளாமல் காப்புடன் வைத்துச் செல்லவேண்டும். ஆதலின் அன்னர்க்கு அரண் அவசியமாயிற்று. எவ்வகை ஆற்றலுமின்றிக் தம்மைப் பகைவர் படையெடுப்பினின்று பாது காத்துக்கொள்ள முயல்வார்க்கும் அவ் அரனே சரணுய் அமைவது. ஆகவே படைவலியுடையார்க்கும் அஃது இல்லார்க்கும் அரண் இன்றியமையாது வேண்டப்படுவது என்பதை, ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள்." என்று கூறி வலியுறுத்தினர் வள்ளுவர். இனி, அரண் அமைப்புக் குறித்து அப் புலவர் பெருமான் புகலும் கருத்துக்களை நோக்குவோம். இயற்கையாகவோ செயற்கையாகவோ அமையப் பெற்ற நால்வகை அரண்களையும் கடந்து பகைவர் படை மதிலரண் அடைந்துவிடுமாயின் அம்மதில் பகைவரால் கடக்கலாகாத அருமையுடைத்தாதல் வேண்டும். மதிலைச் சூழ்ந்த வீரர் அம் மதிலின்மீது ஏணி வைத்து ஏறவும், அதனே உடைத்து உட்புகவும், சிதைத்துக் கைப்பற்றவும் முனைவர். ஆதலின் பகை வரது ஏணிக்கெட்டாத உயரமும், புறத்தோர்க்குத் தோண்ட முடியாக அடியகலமும், அகத்தோர்க்கு கின்று போர் செய்தற்கேற்ற தலையகலமும், கருவி களால் குத்திச் சிதைக்கமுடியாத திண்மையும், தன் பால்கொண்ட பெர்றிகளால் நெருங்குதற்கு முடியாக அருமையும் உடையதே உயர்ந்த மதிலரண். இங்கனம் அரணியல் கூறும் நூல்கள் அறிவிக்கின்றன என்று தெரிவித்தருளினர் திருவள்ளுவர்.
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/107
Appearance