அாதும் உரனும் i03. ஏவறை, சிறிய அம்புகளே வைத்து எய்யும் கருவி, மதிலின் தலையைப் பற்றுவார் கைகளில் உறுத்தி வருத்தும் ஊசிப்பொறிகள், பாய்ந்து சென்று பகைவர் விழிகளைப் பறிக்கும் சிச்சிலிப் பறவை போன்ற பொறிகள், மதிலைப் பற்றுவார் உடலேப் பற்றிக் கிழிக்கும் பன்றி யனைய பொறிகள், பகைவர் மேல் ஓங்கி அடிக்கும் மூங்கிற் பொறிகள், மதிற் கதவுக்கு வலியாக அமைத்த எழுவெனும் மரங்கள், கணேயமரம், கோல், குந்தம், வேல் இவைபோன்ற எண்ணிலாத பொறிகளே மதுரைப் பெருமதில் பெற்று விளங்கியது என்று இளங்கோவடிகள் குறிப்பிட் டுள்ளார் மிேகrயும் கிடங்கும் வாேவிற் பொறியும் கருவிர லுகமும் கல்லுமிழ் கவனும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காய்பொன் உலேயும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலே யடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவும் சிப்பும் முழுவிறல் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும்.’ என்பது சிலப்பதிகாரத்தில் மதிற்சிறப்புரைக்கும் பகுதியாகும். இவையே யன்றி நெருப்பினை உமிழ்ந்து நாற்று வரை ஒருங்கு கொல்லும் ஆற்றலுடைய சதக்கினி, தள்ளிவெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுப்பொறி, புலிப்பொறி, குடப்பாம்பு, சகடப் பொறி, தகர்ப்பொறி, அரி நூற்பொறி முதலாய பல்
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/109
Appearance