102 வள்ளுவர் சொல்லமுதம் வகைப் பொறிகளும் அரணிடத்தே அமைக்கப் பெறும் என்று சிந்தாமணிக் காவியம் செப்பும். அரனுக்கு வழியும் வாயிலும் ஒவ்வொன்றே இருத்தல் வேண்டும். வழி என்பது புறத்தோர் உணராதவண்ணம் வெளியே சென்று மீளும் சுருங்கைவழியாகும். வாயில் என்பது யாவரும் அறியப் போக்கு வரவு செய்தற்குரிய கோபுரவாயிலாகும். இத்தகைய வழி வாயில்கள் பலவாக அமைந்திருப்பின் காக்கவேண்டிய இடம் பலவாகிப் பகைவர்க்கு எளி தாகிவிடும். ஆதலின் அரணிடத்தே படைவீரர் கொண்டு காக்கவேண்டும் இடம் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்லியருளினர் வள்ளுவர். அாணேப் படைவலி படைத்த பகைவர் பன்னுள் முற்றுகை செய்துகொண்டால் அவ்அரனுள் உறை வார் உண்ணல், உறங்கல், உணவாக்கல், படைப் பயிற்சி பெறுதல், படைக்கலங்களே அமைத்தல், உள் ளிருந்தே போர்புரிதல் முதலிய பல செயல்களுக்கும் பரந்து விரிந்த பேரிடம் அகத்தே அமைந்திருத்தல் வேண்டும். மேலும், அவ்அரண் தோற்றத்தால் பகை வர்க்குப் பேரச்சத்தை விளக்கும் பெற்றியுடையதாக இருத்தல் வேண்டும். உயர்வு, அகலம், திண்மை, அருமை என்னும் நால்வகை அமைதிகளும் நன்கு பெற்று, முற்றுகையிட்ட பகைவர் நோக்கிய அளவில் முழுவலியும் இழக்குமாறு செய்ய வேண்டும். இவ் அாணே யாம் எவ்வாறு அழித்துக் கொள்ளவல்லோம்' என்று ஏங்கி அவர்கள் ஊக்கம் குன்றுமாறு செய்தல் வேண்டும். இத்தகைய அரண் அமைப்பு முறையை மிகவும் சுருக்கிய சொற்களால் சொல்லும் வள்ளுவர் வல்லமையை என்னென்பது !
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/110
Appearance