18 வள்ளுவர் சொல்லமுகம் வறத்தார்க்குக் கூடாவொழுக்கம் என்ற அதிகாரத் திலும் கண்டித்துள்ளார். மனையறம் பூண்ட ஒருவன் தன் மனைவி இருக்கவும் கனிகாமத்தால் பிறனுக் குரிய பெருமனக் கிழத்தியைக் காதலித்துச் செல்வது கழிபெரும் பேதைமையாகும். இத்தகைய அறியாமை, அறம்பொருள் பற்றிய நூல்களைத் திறம்பெற ஆய்க் துணர்ந்த மக்கள் பால் என்றுமே உண்டாகாது. பிறன்மனே விரும்பும் பேதையரிடத்து அறமும் பொருளும் அறவே இலவாகும். காமம் காரணமாகப் பல்வகைப் பாவங்களுக்கு உள்ளாகும் மக்கள் உலகில் பலர். அவருள்ளே பிறன் இல்லாளைக் காதலித்த பேதையைப் போலும் பிறிதொரு பேதையை இம் மூதுலகில் காணுதல் அரிதெனக் குறித்தார் திரு வள்ளுவர். காமமயக்கத்தில்ை பிறன் மனேயுட் சென்று கின்றவன் அச்சத்தால் தான் கருதிய இன் பத்தையும் இழக்கின்றன.தலின் அவனைப் போன்ற பேதையொருவன் இல்லை என்று குறித்தார். அறன்கடை நின்ருரு ளெல்லாம் பிறன்கடை நின்ருரிற் பேதையா ரில்.’ என்பது அவர் சொல்லமுதமாகும். பிறன் மனே விரும்பிய பேதையைத் துச்சாரி என இகழ்ந்துரைத்தார் ஒரு சமணமுனிவர். அவன் பிறனது மனேக்குள் புகும்போது மனமும் உடம்பும் ஒருங்கு கடுங்கும். ஆங்குப் பிறன் மனைவியுடன் இன்பம் துய்க்கும்போதும் எல்லேயில்லாத அச்சமே பெருகும். மீண்டும் அம் மனையிலிருந்து வெளிவரும் போதும் கனிபோச்சமே அவனே வாட்டும். அவன் தன்னைப் பிறர் கண்டுகொள்ளாதவாறு காப்பதினும்
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/26
Appearance