பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவும் காமமும் 19 அச்சமே விளையும். இங்ங்னம் எக்காலும் அச்சமே விளக்கும் இழி செயலே ஒரு சிலர் ஏனே விழை கின்றனர்? என்று இரங்குகிருர் ஒரு சமணமுனிவர்.

  • புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்

துய்க்கு மிடத்தச்சம் தோன்ருமல் காப்பச்சம் எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறனில் புகல்.’ என்பது அம் முனிவரின் உளங்கனிந்த மொழியாகும். ஒருவன் பிறன் மனையாளுடன் கூடி வருதலை மற்றையோர் கண்டால் மாரு த குடிப்பழி வந்து கூடுவதாகும். அப் பெண்ணுக்கு உரியவன் கண்ணிற் பட்டுக் கையகத்தும் அகப்பட்டுக் கொண்டால் காம மயக்கினல் பிறன் மனே காடி வந்த அவன் கால்களைக் குறைத்துவிடுவான். அவன் மனேயுள்ளே இன்பம் துய்க்குங்காலும் அச்சமே அளவிறந்து கிற்கும். அவனுக்கு மறுமையில் நிச்சயமாக கிரயத் துன்பம் உரியதாகும் என்று உரைத்தார் மற்ருெரு சமண முனிவர். . - • காணிற் குடிப்பழியாம் கையுறிற் கால்குறையும் மாணின்மை செய்யுங்கால் அச்சமாம்-நீனிரயத் துன்பம் பயக்குமால் துச்சாரி நீகண்ட இன்பம் எனக்கெனத்தாற் கூறு.' என்று வினவுகிருர் அம் முனிவர். உண்மையான அன்புடையார் சிலர் தம் நண்பரைச் சிறந்த பண்புடையாராக நம்பித் தம் மனேயுள் தாராளமாகப் பழக விடுவர். அப் பழக்க மிகுதியால் பண்பிலாத சிலர் அந் நண்பர்தம் மனைவி யரைக் காதலித்து ஒழுகுவாராயின் அன்னர்