பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வள்ளுவர் சொல்லமுதம் தமிழ்நூல் ஒன்றைப் பாடிவிட்டார்.அம்மூதாட்டியார். அதுதான் அசதிக் கோவை என்னும் நன்றிக் காப்பியம். தனது பெயரையும் அசதியால் மறந்து விட்டேன் என்று கூறிய அவ் ஆயர்குலத்து இளை ஞனே இகழாது, அவன் பசித்தீ மாற்றிய நன்றியை நாவாரப் புகழ்ந்து, "அற்ருரைத் தாங்கும் ஐவேல் அசதி.' என்று பாடியருளிய பைந்தமிழ்ச் செல்வியாரின் நன்றியுணர்ச்சியை என்னென்பது! உலகில் பலர் தமக்கு நன்றி செய்தார்க்கு இரங்கிப் பேசும் இயல்பைக் காண்கிருேம். அன்னர் பிறர்க்குத் தீங்கு இழைப்பராயின் அவர் செய்தது. பிழையென நடுவுநிலை பிறழாது எடுத்துரைப்பார் அரியர். தமக்குச் செய்த நன்றி ஒன்றனுக்காகப் பிறருக்கு இழைக்கும் பிழைகள் நூற்றினையும் பிழையென்று பேசாத பெருமக்கள் சான்றேர் ஆகார். பகைவராயினும் நண்பராயினும் அயலவ ாாயினும் வேறு எத்திறத்தவராயினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கும் கிலேயே நடுவுநிலைமையெனப் படும். இந்நடுவுநிலை பிறழாத நல்லியல்பைச் சான் ருேர்க்கு அணியெனச் சாற்றினர் வள்ளுவர். சமன்செய்து சிர்து க்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்ருேர்க்கு அணி.' என்பது அவர் சொல்லமுதமாகும். துலாக்கோல் தன்பால் பாரம் வைத்தற்கு முன் னர்ச் சமனக கிற்கிறது. பின்னர்த் தன்கண் வைத்த பாரத்தை வரையறுத்துக் காட்டுகிறது. அதைப்