உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வள்ளுவர் சொல்லமுதம் மீன்கள் தானத்தினின்று வீழும்; பெண்கள் மூவர் சேர்ந்து பேசினர்களாயின் பெருங்கடலே வறண்டு போகும்; இம் மூவர்க்குமேல் பலர் பேசுவராயின் உலகில் யாது தீங்கு விளையுமோ? அறியேன் என்று இரங்கினர் அவ் ஆசிரியர். - பெண்ணின் இயல்பைச் சொல்லவந்த முனைப் பாடியார் என்னும் புலவர், பெண்ணுவாள் கொண் டவன் குறிப்பறிந்து நடக்கவேண்டும்; காணமுடைய வளாக இருக்கவேண்டும்; கண்ட பொருள்களே யெல்லாம் விரும்பாதிருக்கவேண்டும் ; கணவனும் உற்றவரும் வெறுக்கும் செயல்களே விட்டொழிக்க வேண்டும்; பிறர் பொருளே விரும்பாதிருக்கவேண்டும்; பெண்ணுக்குரிய சிறந்த உறுப்புக்களைப் பெற்றிருக்க வேண்டும் ; கல்வியறிவும் அமைந்திருக்கவேண்டும் ; இன்னவளே பெண்ணுவாள் என்று குறிப்பிட்டார். கொண்டான் குறிப்பொழுகல் கூறிய நாணுடைமை கண்டது கண்டு விழையாமை-விண்டு வெறுப்பன செய்யாமை, வெஃகாமை நீக்கி உறுப்போ டுணர்வுடையாள் பெண்." என்பது அவர் சொல்லும் அறநெறிச்சாரம். புகழேந்திப் புலவர் தமது நளவெண்பாவில் பெண்மையைக் காக்கும் விதத்தை நன்கு விளக்கு இருர், பெண்மையை ஒரு நாடென்று உருவகம் செய்து கொண்டார் அப்புலவர். அந்நாட்டையாளும் அரசாகப் பெண்ணே உருவகப் படுத்திக் கொண்டார். பெண்ணரசி தனது பெண்மையெனும் பெருநாட் டைத் திண்மையுறக் காக்கும் திறம் யாது? நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்குணங்களும்