பெண்மையும் திண்மையும் 51. கால்வகைப் படைகளாக அமையவேண்டும். மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்பொறி களும் ஐம்பெருங் குழுவாகிய அமைச்சரவையாக விளங்க வேண்டும். கால்களில் அணிந்த சிலம்புகளே கவினுறு முரசங்களாக ஒலிக்க வேண்டும். கண்கள் இரண்டும் வேலும் வாளுமாகத் திகழவேண்டும். முழுமதி போன்ற முகமே வெண்கொற்றக் குடை யாகத் தண்ணிழல் செய்ய வேண்டும். இத்தகைய உறுப்புக்களின் உறுதுணேயால் பெண் தன்னியல், பைப் பேணிக் காத்தல் வேண்டும். "நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சன் ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா-வேற்படையும் வாளுமே கண்ணு வதன மதிக்குடைக்கீழ் ஆளுமே பெண்மை அரசு’ என்பது அப்புலவரது அரிய் வெண்பா. பெண்மைக்குரிய திண்மையான கற்பு கிலேயைச் சித்தலைச் சாத்தனர் மூவகைப்படுத்து மொழிந்தார். தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு என்று வகுத் துரைத்தார் அத்தமிழ்ப் புலவர். கணவர் உயிர் துறந்ததை அறிந்ததும் நெட்டுயிர்ப்புடன் உயிரை விட்டொழிக்கும் உத்தம மகளிர் தலைக்கற்புடையா ராவர். கணவர் இறந்ததும் தம் உயிரைப் போக்கிக் கொள்ளுதற்காகத் தீயுட் பாய்ந்து மாய்வார் இடைக் கற்புடையாராவர். கணவர் இறந்த பிறகு மறுமை 'யிலும் அவருடன் கூடிவாழும் பேறு பெறுதற்காக உண்டி சுருக்குதல் போன்ற நோன்புகளைக் கொண் டொழுகி உயிர் நீங்குவார் கடைக்கற்புடையாராவார். காதலர் இறப்பின் கனையெரி பொத்தி ஊதுலேக் குருகின் உயிர்த்தகத் தடங்கா(து)
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/59
Appearance