பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வள்ளுவர் சொல்லமுதம் ஒருவன் முற்பிறப்பில் என்னவினை செய்தான் என்பதைப் பிறந்துள்ள இப்பிறப்பில் துய்க்கும் இன்ப துன்பங்களைக் கொண்டே அறிந்து கொள்ள லாம். இப்பிறப்பில் அவன் செய்யும் வினையால் மறுமையில் பெறும்பேறு இன்னது என்பதையும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிந்துரைத்தார் அறநெறிச்சார ஆசிரியர். இறந்த பிறப்பில்தான் செய்த வினையைப் பிறந்த பிறப்பால் அறிக-பிறந்திருந்து செய்யும் வினையால் அறிக இனிப்பிறந்(து) எய்தும் வினையின் பயன்." என்பது அவர் காட்டும் அறநெறி. பெண்ணுெருத்தி பெருநலம் படைத்து விளங் கினுள். அவள் சிறந்த செல்வக் குடியில் பிறந்தவளே. அவள் நலங்களுக்கு ஏற்ற இளங்காளே ஒருவனே கணவகை வாய்த்தான். எனினும் அவள் அக்கணவ அனுடன் கூடிவாழும் இன்பத்தைப் பெருது ஏங்கி நின்றுள். அவளது வருந்திய கிலேகண்ட தோழி "கினக்குக் குறையொன்றும் இல்லையே நின் கவ இலக்குக் காரணம் யாது?’ என்று வினவிள்ை. அதற்கு அவள் கூறிய மறுமொழி விதியின் பயன் என்ப தொன்றே : - . ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது தானுழி-தோழி நிதியும் கணவனும் நேர்படினும் தந்தம் விதியின் பயனே பயன்." என்பது தமிழ் மூதாட்டியின் அமுதமொழியாகும். கற்பகத்தரு வேண்டுவார் வேண்டுவன எல்லாம் விரும்பி யளிக்க வல்லது. அத்தகைய கற்பகத்தை