வள்ளுவர் வணங்கிய கடவுள் 101
உள்ள பானைக்குத் தான், பயன் கருதி மரியாதை. அதற்காக, பானையில் தண்ணிர் ஊற்றுகிறோம்.
ஊற்றுகிற தண்ணிர் பானையில் இருக்க வேண்டும். அந்தப் பானை நீரில்லா நிலைமையிலே இருந்தால், தந்த தண்ணிரைத் தேக் கிவைத்துக் கொள்ளும் திறம் அதற்கு இல்லையென்றால், பானைக்கு மரியாதை என்ன?
பானையில் பழுது என்றால், பயன்கள் அங்கே கிடைக்காதல்லவா!
அதுபோலவே, குருவிடம் கற்றுக் கொள்ள முடியாத தகுதி ஒருவருக்கு இல்லையென்றால், அவர்களால் எப்படி சிறந்த சீடர்களாக இருக்க முடியும்?
நல்ல உடல் தான், நல்ல படகுக் குச் சமம். வாழ்க்கை நீரோட்டத்தில் எதிர்த்தோ, அல்லது நீர் வழியோ சென்று சேர உதவும் படகு, ஒட்டையாக இருந்தால், பயணம் பாழாகும். அல்லது வாழ்வே மூழ்கிப் போகும்.
படகு திடமாக இருந்தால், பாதுகாப்பான பயணம் நடக் கும். அதைப் போலத் தான், உடல் வலிமைாக இருந்தால் , மட்டுமே வாழ் வும் வலிமையாக அமையும் என்பார்கள்.
அறம் சார்ந்த அரிய அறிவை, ஆன்மீக ஒளியை, செல்வத்தைப் பெற விரும்புவோர்க்கு, வலிமையான உடல் ஏன் வேண்டும்? என்று கேட்பவர்களும் உண்டு.
நல்ல உடலில் தான் நல்ல மனம் இருக்கும். வலிமையான உடலில் தான் வலிமையான மனமும் இருக்கும்.