டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
I24
திருமாலைக் கண்ணாலே கண்டோம் என்பார் கானென்ற காட்டுக்குள் அலைவார் கோடி
காரணத்தை அறியாமல் கதறுவாரே’
(வால்மீகர்)
இதை மனதில் வைத்துக் கொண்டுதான், வள்ளுவரும் மிக அருமையாக, பொய் தீர் ஒழுக்கம் என்று பாடினார்.
ஒழுக்கம் என்பது ஒழுகுதல் என்ற வார்த்தையால் பிறந்த ஒன்று. ஒடை நீர் ஒடுகிறது; அருவி நீர் குதிக்கிறது; கடல் நீர் அலை பாய்கிறது; நதிநீர் நடை போடுகிறது என் பார்கள் அது இயற் கையான நீரின்இயக்கம்.
ஆனால், தண்ணிர் ஒழுகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் போது, தடையில் லாமல், சீராக, தொடர்ச்சியாக, தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போதுதான், ஒழுகுகிறது என்று சொல்கிறோம்.
ஒழுக்கம் என்பது, நன்மை பயக் கின்ற நல்ல காரியங்களை, எந்த நேரத்தில் எந்தத் தடை நேர்ந்தாலும் தடுமாற்றமின்றி, தயக்கமின்றி, சீராக, சிறப்பாக, தொடர்ச்சியாக, தொய்வில்லாமல் செய்து கொண்டு வருவதையே குறித்துக் காட்டுகிறது.
ஒழுக்க நெறி நின்றார் என்ற வார்த்தைகளும், இன்னும் கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாக, நம்மை சிந்திக்கத் துண்டுகின்றன.
நிற் றல் என்றால், நிலையாக, ஒரிடத்தில் இருப்பது என்பது பொருளாகும். அது போலவே, நின்றார் என்றால், நிலைத்து நின்றார், விடாது