உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 143

திருக் குறளை எழுதினார். அவரது பொய் யில் லாத குறட் பாக்களுக்கு, உரை தர வந்த பலர், அவரது குறள்களுக்கு மூட நம்பிக்கைகளை முக்காடாகப் போட்டு மூடி, சமயத் தீயில் போட்டு, சமைத்து விட்டனர். தகர்த்து விட்டனர். o

சமயக் கணக்கர்களுக்கு, வாய்ப்பும் வசதியும் இருந்த காரணத்தால், அவர்கள் எழுத்தும் பேச்சும், குறள்களுக்குரிய உண்மைக் குறிக் கோள்களை, மக்களுக்கு வேறு விதமாய் போய்ச் சேரச் செய்தன.

இங்கே அற என்ற சொல்லுக்கு, நாம் கொண்டிருக்கும் நம்பகமான பொருளாவது, உடலியல் , மனித வள இயல் , உலகியல் என்ற அடிப்படையில் அமைந்திருக்கிறது.

உலக வாழ்க்கையை உய்த்திட, உயர்த்திட, ஒளி மயமாக்க உதவுவது உடலேயாகும்.

உடலால் உள்ளமும் உறுதியும் வலிமையும் பெற மனித வளம் மிகுதியாகிறது.

மனித வளம் மேம்பாடு பெறப் பெற, உலக வாழ்க்கை உன்னத நிலைக்கு உயர்ந்து போகிறது.

ஆகவே, இங்கே அற என்ற சொல், உடலைக் கெடுக் கின்ற தீய செயல்களை, மனித வளத் தினை மாய்த்துப் போடுகின்ற மாய்மாலச் செயல்களை, பிறர் பழிக் கும் பண் பற்றச் செயல் களை முழுவதுமாக அறுத்தெறிகிற உண்மை நிலையைத்தான் அற என்று சொல்லியிருக்கிறார்.

அற என்பதற்கு, முற்ற, முழுதும், அறும் படி, தெளிவாக, செவ்வையாக, என்று பல பொருள்களை நாம் அறிகிறோம்.