உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

144

உலகம் பழிக் கும் படியான, உடலைக் கெடுக்கும் படியான தீச் செயல் கள் அறும் படி, அற்றுப் போகும் படி, முற்ற முழுதுமாக விலக்கி, அழித்து, ஒழித்து நிற்கும் பண்பாளர் தான் அந்தணர் என்கிறார் வள்ளுவர்.

ஆழி என்றால் கடல் என்பர். கட்டளை என்பர்..

அற ஆழி என்பதை, அறக்கடல் என்கிறார்கள். ஆழி என்றால் கடல் என்றால், கடல் என்பதற்கு மிகுதி என்ற ஒரு பொருளும் உண்டு.

இல்லறத்தில் இருந்து வெளியே வருவதை துற என்றனர். ஆசைகளைத் துறந்து வருவது மட்டுமல்ல துறவு. அத்தனை அவாக்களையும் ஆசைகளையும் அறுத்து வெளிவருவதுதான் துற அறம் என்றனர். துறவு எளிது. துறவறம் தான் கடினம்.

ஆக, உலகத்தில் இன்பம் என்பது எது எது என்று, அவரவருக்கு ஏற்ப வகுத்துக் கொண்டு மக்கள் எல்லோரும் ஆளாய் பறக் கின்றார்களோ, அவற்றையெல்லாம் அறவே துறந்த கடல் போன்ற பெருமை கொண்டவராக விளங்குபவரையே அந்தணன் என்கின்றார். -

அப் படியென்றால் , அந்தணர் என்கிறபோது, ஏதோ ஒரு சாதியினரை பெருமைப்படுத்த வேண்டும் என்ற சொல் லிய சொல் லா? சாதாரண மக்கள் இப்படித்தான், திசை மாறி சிந்தித்துக் கிடக்கின்றனர்.

அந்தணர் என்போர் அறவோர் என்று அழுத்தந் திருத்தமாகக் கூறினாலும், அந்தணர் என்பவர்கள் ஐயர்கள், பார்ப்பனர்கள் என்றுதான் பலர் நினைவு