வள்ளுவர் வணங்கிய கடவுள் I47
அவர் பெற்றிருக்கும் ஞானத்தால், மோனத்தால், ஒளி மிகுந்த அழகு உருவமாகத் திகழ்கிறார் என்கிற பொருள்களையெல்லாம் உள்ளடக்கிய சொல் லாக, அந்தணன் என்று சொல் அமைந்திருக்கிறது.
அந்தணருடைய தாள் சேர்ந்தார்க்கல்லால் எனும் வரிக் கு, முந்தைய குறளில், விளக்கமாக எழுதி யிருப்பதால், இங்கே தொடரவில்லை.
பிறவாழி என்ற சொல்லைப் பிரித்து பிற ஆழி என்று வருகிற போது, மற் றைய கடல் கள் என்று பொருள் வருகின்றது.
வாழ்க் கையை நீண்ட நெடும் பயணம் என்று கூறுவார்கள். அது நில வாழ்க்கைக்குப் பொருந்தும்.
நிலவுலகைச் சுற்றி நீருலகம் இருப்பதால், அதை நினைவு படுத்துகிறபோது, வாழ்க்கைப் பயணத்தை எதிர்நீச்சல் என்பார்கள்.
எதிர் நீச்சல் போடுகிற திறமையும், தேர்ச்சியும்
மிகுந்தவர்கள் தாம், எதிலும் வெற்றி பெற முடியும் என்பது பெரியோர்கள் கருத்தாகும்.
இங்கே அந்த எதிர்நீச்சலை எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டளையைக் கொடுக்கவே, இங்கேயும் ஆழி என்ற சொல் லைப் பொட்டிருக்கிறார். -
கடல் என்றால் மிகுதியும் என்ற பொருள் உண்டு.
நிலவுலகில் மிகுதியான இடத்தை நீர் உலகம் அதாவது கடலுலகம் தான் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது. - - -