பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 149

பெருமையும் புகழும் பெற்று நிலத்திலே நீடு வாழ்வார் என்றார்.

அவரின் அறிவுரை பெற்று, ஞானவழி நடந்தால், எப்போதும் துன்பம் இல்லை. துன்பமே தொடராது என்றார்.

குருவின் ஞானம் அகத்தின் இருளைப் போக்கிவிடும் என்றார்.

பொறிவாயில் அவித்தவனின் நெறி நின்றால் நீடு வாழ முடியும் என்றார்.

அத்துடன், மனக்கவலைகளையும் மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையை தெரிவித்தார் வள்ளுவர்.

ஏழு குறள்களில் கூறாது விட்டதை, எட்டாவது பாடலில், குருவானவரின் ஞானம் மட்டும் போதாது. அந்த ஞானத்தை கைவரப் பெற் றதால் மட்டும் போதாது என்று புத்தியில் படும்படியான பாதையைக் காட்டுகிறார். -

ஞானத்தை அகத்தில் ஏற்றுக் கொண்டு, அதனை செயல் படுத்த, புற தேகத்துக்கு வலிமை வேண்டு மல்லவா!

அந்த வலிமையை சுட்டிக் காட் டவே, நீந்தல் என்ற சொல்லை இங்கே கொடுத்திருக்கிறார்.

நீந்தல் என்பதை நீச்சல் என்று சொல்வார்கள்.

இந்த நீச்சல் வேலையை இரண்டு விதமாகச் செய்யலாம். ஒன்று வெள்ளத்துடன் பின்னே செல்லுதல் , மற்றொன்று வெள்ளத் தை எதிர்த்து முன்னே செல்லுதல்.