இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
I52 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
கொண்டிருக்கும் தேகம் , தானும் வலிமையின்றி இருந்தால், என்ன ஆகும்!
தேகம் என்பது முதல் அல்லவா! தேகம் என்பது உயிர்நிலை அல்லவா ஐம் பொறிகளுக்கும் அது தாயாக இருந்து திடப்படுத்துகிற தல்லவா!
ஆகவே, மனிதர்க்கு ஞானத்துடன், உடல் வலிமையும் வேண்டும் என்பதற்காகவே, நீந்தல் என்று சொல்லி வைக்கிறார்.
அவனியின் ஆசைகள் அனைத்தும் அறுத்து அடக்கி, முற்றும் துறந்த மேன்மையை மிகுதியாகப் பெற்ற குருவான அந்தணரின் ஞானத்தை, வலிமை சார்ந்த வாழ்வு முறையை, வாழ்க்கையாகக் கொள்ளா தவர்கள், வாழ் வில் ஏற் படும் பிற துன்பங்களை கடல் களை யெல்லாம் நீந்திக் கடப்பது என்பது முடியாத காரியமாகும். அப் படியென்றால், நீந்தி செயிப்பதற்கு ஞானத் தோடு உடல் வலிமையும் வேண்டும் என்பதே பொருளாகும்.