பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

ஏறத்தாழ இந்த உலகத்தில், மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளை வளைத்துப் பிடித்து, பரந்து கிடக்கிறது.

ஆழி என்றது ஆழத்தைக் குறிக்க வந்தது. இங்கே கடல் அகலப் பரப்பைக் குறிப்பதற்காகக் கூறப்பட்டது.

மத்தியத் தரைக் கடலின் கீழ்க்கரையில் சாக்கடல் (Dead sea) என்பது ஒன்று உண்டு. அதன் அகலம் 9 மைல். நீளம் 47 மைல்.

ஒரு சிறிய கடலே இவ்வளவு மைல் நீளம் என்றால், வள்ளுவர் குறிக்கும் பெருங்கடல், நாம் கற்பனை செய்தாலும், முடியாத ஒன்றாகும்.

அதனால்தான் கரைகாண முடியாத கடல் என்று கூறுவர். இங்கே கரை என்றது ஒரு எல்லையைத்தான். ஒரு கரையிலிருந்து மற்றொரு கரையைக் காண இயலாத பெருநீர்ப்பரப்புத் தான் கடலாகும்.

பிறவி என்று கூறிவிட் டு, பெருங் கடலைக் கூறுகிறார். வாழ்க் கை என்பதை நாம் பெரிய கடலாகக் கூறுவோமானால், ஒரு கரை பிறவி என்பது, தெரியாத மறுகரை இறப்பு என்பது.

இந்தப் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைபட்டு வாழ் கிற நிகழ்ச்சிகளுக்குத் தான் வாழ்க்கை என்று பெயர்.

வாழ்க் கையைப் பற்றி பலர் பல விதமாகப் பேசுவார்கள். திக் குத் தெரியாத காடு என்பார்கள். எல்லை இல் லாத வானம் என் பார்கள். புரிந்து கொள்ள முடியாத புதிர் என் பார்கள். வருவது தெரியாத விபத்து என்பார்கள்.