184. டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
நம் பியதன் விளைவு, தேடினார், தேடினார். தேடித் திரிந்ததுதான் பலன். தேடியவர்களை, மனிதர்களில் தெய்வத்தை, அவரால் தெரிந்தெடுக்க முடியவில்லை. தெரிந்து கொள்வும் இயலவில்லை.
பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்.
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்றும் தமிழ்ப்பண்பாட்டிற்கு இணங்க, தான் பெற்ற அந்தத் தெய்வ நிலையை, தமிழ் கூறும் நல்லுலக மக்களுக்கு மட்டு மன்றி, தரணி வாழ் மக்கள் அனைவருக்கும், சுவையோடு தந்துவிட்டார்.
எப்படி வாழ்ந்தால், மக்கள் எல்லோரும் சக்தி மிகுந்த தெய்வநிலையை எய்திட முடியும் என்று எண்ணித் தெளிந்து, இனிமை நிறைந்த ஒரு இலக்கியமாக அமைத்தார்.
சற்று ஆழ்ந்து கற்றுத் தெரியட் டுமே என்று, மறையாக கருத்துக்களை நிறைத்து வைத்தார்.
நாதமாக, நலம் பயக்கும் கீதமாக அமையட்டுமே என்று வேதமாகவும் ஓதி வைத்தார்.
அதற்குப் பெயர் தான் திருக்குறள் என்று ஆனது.
இந்த அரிய பெரிய சீரிய முயற்சிகளுக்காகத்தான், வள்ளுவர் தனது 133 அதிகாரங்களில் , முதல் அதிகாரமாக கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தைத் தந்தார்.
கடவுள் வாழ்த்து என்றதும், கடவுளை வாழ்த்தித் தான் பாடினார் என்று எல்லோருமே, விளக்கம் தந்து விட்டார்கள்.