வள்ளுவர் வணங்கிய கடவுள் 85
பன்னு தமிழ் தி தேர் பரிமேலழகன் எனும் , மன்னும் உயர் நாமன் வந்து, திருக் குறளுக்கு உரையாக விரித்துரைத் தான் என்று ஏத் திப் புகழப் படுகிற பரிமேலழகரின் வழி தொடர்ந்து, ஏறத்தாழ எல்லோருமே, கடவுள் வாழ்த்து என்றே வழி மொழிந்து விட்டார்கள்.
கடவுள் வாழ்த் தை சிலர் முதல் வன் வாழ்த்து என்றனர். வேறு சிலர் அறிவன் சிறப்பு என்றனர். பெரியார் அவர்கள் பண்புச் சிறப்பு என்று தலைப்பு தந்தார்.
‘கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத் தை, திருவள்ளுவர் தரவே இல்லை. அவரே அதிகார முறை வைப் புக்களை அமைத்தார் என்று கொள்ளுவ தற்கில்லை. வள்ளுவர் நூலை, பிற்காலத்தில் எடுத்து எழுதிய புலவர் பெருமக்கள், அதிகார முறை வைப்போடு விளங்கினால்தான் சிறக்குமெனக் கருதி, இதனை செய் திருக்க வேண்டும் என்று பல ஆய் வர்கள், தங்கள் கருத் தினை தெளிவு படுத் தி இருக்கின்றனர்.
இங்கே, நான் கடவுள் வாழ்த்து என்பதற்கு, சூரியன் வணக்கம் என்று பொருள் கொண்டிருக்கிறேன்.
வள்ளுவர் வாழ்ந்த காலத்தை, இன்றைக்கு 2000 ஆண்டுகட்கு முன்பு என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
1921ம் ஆண்டு, சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில், தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி, பல நாட்கள் ஆய்வரங்கம் நடத்தி, இறுதியாக