உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

வாயைத் திறந்தவுடன் அகரம் காற் றான அருவமாக வெளிவருகிறது. அதற்கு ஒ சை சேர்ந்தவுடன், ஒலியான உருவமாகி விடுகிறது.

ஆதவனால், மூன்று வகை மக்களும் சிறப்பும் செழுமையும் பெறுகின்றனர். ஒளியால் புற இருள் போகிறது. அதன் அருளால் மனித உடல் மாட்சி பெறுகிறது.

இப்படி அகரமும் ஆதவனும், மக்களின் உடலை மேம்படுத்தவும் , மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவுகின்றன என்பதால் தான், சூரிய வணக்கம் என்று போற்றிப் பரவிபாடியிருக்கிறார். -

இன்றும் சூரிய நமஸ்காரம் என்ற யோகப் பயிற்சி தொடர்கிறது. அது, சூரியனை வணங்க வணங்க, உடல் வலிமையையும் நுண் மை சக்திகளையும் நிறைய தருகின்றது என்பது அனுபவ வாயிலாக அறிந்த பேருண்மையாகும்.

இவ்வாறு மனிதர்களை, அளவில் லாத சக்தியாளர்களாக்கி, ஆன்ற ஞானம் பெற்றுத் திகழ்கிற தெய்வ மக்களாக விளங்க வேண்டும் என்ற பாசத்துடன் பாடிய குறள்களே, திருக்குறள்கள் ஆயின.

மனிதர்களில் யாராவது சிலர் தெய்வ மக்களாக வருவார்கள் என்று தேடிய, திருமுயற்சிதான், தெய்வத் திருக் குறளாக மலர்ந்தது. அவர் தேடிய முயற்சிகளுக்கு, பயன் கிடைத்ததா?

அவரது தீர்க்கத் தரிசனம் மக்களுக்கு தூய சக்தியைத் தந்ததா? யாராவது சிலர், தெய்வ நிலைக் குத் தேறினார்களா? குறட் பாக்களின் கூர்மையான ஞானம், நேர்மையான சமுதாயத்தை