உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 20.3,

அமைத்ததா? வள்ளுவர் காட்டிய உள்ளம் கவர் வழியில், கற்ற எல்லோரும் ந டந்தார்களா? தொடர்ந்தார்களா? சிறந்தார்களா?.இல்லை கற்றபின் மறந்தார்களா என்பன போன்ற கேள்விகளுக்கு காலம் தான் பதில் கூற வேண்டும். .

அவர்களே அவர் வணங்கும் கடவுளாயினர்.

தெய்வப் புலவர் தன்னைப் போல எல்லோரும் வரவேண்டும், வாழ வேண்டும் என்று பாடினார்.

தமிழ்ச் சமுதாயம், தன்னிகரில் லா இந்தத் தமிழ் மறையை தெளிவுறக் கற்று, தெய்வநிலை அடைய வேண்டும் என்று எதிர்பார்ப்போடு பாடினார்.

இந்த எண்ண எழுச்சியின், இனிய நோக்கத்தில் தான், என் ஆய்வு முயற்சியைத் தொடர்ந்தேன்.

எனது எழுத்துக்கள், உங்களுக்கு உற்சாகம் ஊட்டியது, உயர்வு பெற வேண்டும் என்ற உந்துதலை ஊட்டியது, அதற்கான ஆக்கப்பணிகளிலே உழைக்கத் தூண்டியது என்றால் , நான் மிகவும் மகிழ்ச்சி யடைவேன்.

வள்ளுவர் வணங்கிய கடவுளாக, உயிர் வாழ்ந்த மனிதர்களில் உன்னதமானவர்களே விளங்கினார்கள் என்று அறிகிறபோது, மனிதன் புனிதனாக முடியும், பூவுலகும் வணங்குகிற இனிதனாகவும் முடியும் என்ற நம்பிக்கை நமது இதயவானிலே உதயமாகி ஒளிர்கின்றது. - -