வள்ளுவர் வணங்கிய கடவுள் 45
குருவின் திருவடித் தாமரைகட்கு, வணக்கம் செய்வது கடமை என்பது, உயர்ந்தோர் பின்பற்றிய பண்பான செயலாகும்.
‘திருத்தகு சீர்த் தெய்வத் திருவள்ளுவர் ‘ (1) ‘முப்பாலில் தெய்வத் திருவள்ளுவர் ‘ (49) ‘'தேவர் திருவள்ளுவர்’ (41) ‘'தேவிற் சிறந்த திருவள்ளுவர் ‘ (39)
என்று திருவள்ளுவரை, தேவராகவும், தெய்வமாகவும் பாடி இருக்கின்றார்கள் தமிழ் ப் புலவர்கள். இப் பாடல்களை திருவள்ளுவமாலையில் படித்து இன்புற வேண்டுகிறோம்.
அத்தாமரை மேல் அமர்ந்திருக்கும் அயன் தான் வள்ளுவனாகி, வேதப் பொருள்கள் விளங்க, பொய் யாது உலகினுக்குத் தந்தான் குறள்பாக்களை என்கிறபோது;
வள்ளுவர் தெய்வ மனிதராகவே நமக் குத் தோன்றுகிறார். ஆகவே, தன்னைப் போலவே, தமிழர்கள், தமிழ் கற்ற மற்ற மொழிமாந்தரும் வந்து, மகிமை பெற்று, மனித வாழ் விலே தெய்வ நிலையைப் பெற்று, தேவ வாழ்வு வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், குறட்பாக்களைக் கொடுத்தி ருக்கிறார்.
திருவள்ளுவர் தேடுகிற மனிதர்கள், தெய்வமாகி மறைந்து போக வேண்டும் என்பது அல்ல.
ஆற்றல், பலம் , பெருமை, சீர்மை, அறிவு, பற்றற்ற பாங்குடன் வாழ் ந் திட வேண்டும் என்ற பெரிய ஆசை அவருக்கு. அவற்றை அடைய, குருவின்