பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

5O பிறப்பிற்கே களங்கம் கற்பிப்பது போல, கயமைத் தனமான கதைகளை புனைந்து பரப்பினார்கள்.

முதல் கதை.

ஆதி என்னும் ஒர் அழகிய பெண், தவ முனி என்னும் வேதியன். அருள் மங்கை என்பவருடன் சேரப் பிறந்தவள் அந்த ஆதி. அவள் பிறந்த பிறகு, பிறந்த ஊர் மண்மாரியால் அழிய,’அவள் ஒருத்தியும் பிழைத்து, உறையூரில் உள்ள தாழ்த் தப் பட்ட ஒருவரிடம் வளர்ந்து, நீதி ஐயனிடம் இருந்தபோது, பகவனை மணந்து, ஒளவை, முதலிய வரைப் பெற்றாள்.

இப்படி ஆதி என்னும் ஒரு பெண்ணின் கதையை அபிதான சிந்தாமணி என்னும் நூலில் - 126ம் பக்கம் காணலாம்.

இனி ஆதியை மணந்த, பகவன் என்பவனின் கதையைப் பார்ப்போம்.

பகவன் என்பவன், பெருஞ்சாகரன் என்பவரின் புதல் வன். இவன் காசி யாத் திரையின் பொருட் டு புறப் பட்டு, மேலுரர் அகரத் தில் தங்கினான். அவ்விடம் ஒரு பெண் வர, அவளை புலைச்சி யென்று சட்டுவத்தால் (அகப்பையால்) அடித்துத் துரத்தி, காசி யாத்திரைக் குச் சென்று மீண்டும் மறுபடியும் வந்து, அந்த சத்திரத் தில் தங்கி, முன்பு அகப் பையால் அடிபட்ட அந்தப் பெண்ணைக் கண்டு மயங்கி, அவளை வளர்த்தவரிடம் சென்று, அனுமதி பெற்று அவளை மணந்து, மங்கல ஸ்நானத்தின் பொருட்டு அவள் மயிரை வகிர்ந்து, தாம் அடித்த அடியைக் கண்டு, இவள் ஆதியாள் என்று ஒடுகையில், அவளும்