வள்ளுவர் வணங்கிய கடவுள் 51
பின் தொடர, இருவரும் பாணச் சேரியில், ஒரு மண்டபத்தில் புணர்ந்தனர். இவ் விருவருக்கும் ஒளவை பிறந்தனள்.
கணவனுடன் செல்ல வேண்டிய ஆதி, குழந்தையை விட மனமில் லாது மயங் குகையில் , அக் குழந்தை என்னை விட் டு நீங்க மயங் கற்க என கவியால் கூறக் கேட்டு, அப் புறம் கணவனுடன் சென்று, பல இரவுகள் தங்கி, ஆங்காங்கு உப்பை, உறு வை, கபிலர், வள்ளி, திருவள்ளுவர் முதலியவர்களையும் பெற்றுவிட் டுச் சென்றனன். இவனுக்கு ஞானிதந்தன் எனவும் பெயர் (அபிதான சிந்தாமணி. பக்கம் 1001)
இந்தக் கதையின் நாயகனும் நாயகியும் தான், வள்ளுவர் கூறிய ஆதி பகவன் என்று வலிந்து கூறி, விதண் டாவாதக் காரர்கள் மக்கள் மனதிலே, ஒரு மயக்க உணர்வை ஊட்டி, உண்மையை மறைத்துப் போய்விட்டனர்.
காமம் கண் மறைக்க, கண்ட இடத்தில் கூடி, கசப்பான ஒப்பந்தத் தை உண்டாக் கிக் கொண்டு, கண்மணிகளான குழந்தைகளை, கானகத்தே போட்டு விட்டுப் போன, காதகர்களை முன் நிறுத்தி, இந்த ஆதி பகவன் முதற் றே உலகு என்று பொருள் கூறினால், எழுதிய வள்ளுவருக்கு எவ்வளவு அவமானம் ? இதனை ஏற்றுக் கொண்ட உலக மக்களுக்குத் தான் எத்தனை கேவலம்?
வள்ளுவர் வாழ்ந்த காலத்தின் வருடங்களே விவாதத்திற்குரியதாக இருக்கிறபோது, இப் படிப் பட்ட கதைகளையும் ஏற்றுக் கொண்டதே இந்தச் சமுதாயம்!