பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 57

வசனங்களைப் பாருங்கள்.

1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும்,

2. (அது அஸ்தமித்ததற்குப்) பின் அதைத் தொடர்ந்து உதயமாகும் சந்திரன் மீதும்

3. (சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும்,

4. (அதனை) மறைத்துக் கொள்ளும் இரவின்

மீதும்,

5. வானத்தின் மீதும் அதை அமைத்தவன் மீதும்

6. பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும்,

7. ஆத்மாவின் மீதும், அதனை (மனிதனாக )

உருவாக்கியவன் மீதும்,

8. அதன் நன்மை, தீமைகளை, அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக” (குர் ஆன்: பக்கம் 720.91. வசனம் 1 முதல் 8 வரை)

சத்தியப் படுத்திச் சொல்லும் போது, சாட்சியாக, முதலில் கூறப் படுவது சூரியனாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்கிற போது, மனித வாழ்க்கையும், மத வாழ்க்கையும், சூரியனை முதலாக வைத் தே அமைந்திருக்கிறது என்பதை நாம் உணரலாம்.

உலக மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்துக் கும், ஆதவனே காரணமாயிருக்கிறான் என்று அனுபவ மூலமாக அறிந்து வைத்திருந்தார்கள் நமது ஆன்றோர்கள்.