பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

இன்றோ, சுற்றுப் புறச் சூழ் நிலைகளைத் தூய்மையாக்கி, சுகமும் சுவாசமும் கொடுக் கின்ற சூரியனைப் பற்றி, அனுபவித்தபடி ஆராய்ச்சியே செய்து வைத் திருக்கின்றனர் நமது அறிவியல் வல்லுநர்கள். -

ஆகாய வெளியில் காணப்படும் அண்டங்களுள் சூரியனும் ஒரு கோளமே. இதை அக்னி மேகங்கள் சூழ் ந் திருக்கின்றன. முதன்மையான சூரியனை நடுவாகக் கொண்டு, புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன் சனி, யுரேனஸ், நெப்தியூன் என்பவை சுற்றி வருகின்றன. இவையெல்லாம், சூரியனிடமிருந்தே ஒளியைப் பெறுகின்றன.

வட்ட வடிவமான சூரியன், தன்னைத்தானே 26 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு 26 லட்சம் மைல்களுக்கு மேல் அதிகம். குறுக்களவோ 8 லட்சத்து 70 ஆயிரம் மைல்களுக்கு மேல் அதிகம். இதன் பரப்பளவு நாம் வாழும் பூமியை விட 12 ‘/2 லட்சம் மடங்கு பெரியது. இதன் கனம் பூமியை விட 13 லட்சம் மடங்கு அதிகம்.

பூமியிலிருந்து சூரியனின் துரம் 9 கோடியே, 28 லட் சத்து ஆயிரம் மைல்களாகும். கிழக்கில் உதயமாகிற சூரியன், மணி ஒன்றுக்கு 1500 மைல் வேகத்தில் மேற்கு நோக்கிச் செல்கிறது. என்று சூரியனைப் பற்றி ஒரு பட்டியலே போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

நாம் வாழும் பூமியின் வெப்பம் 50 டிகிரிக்கும் மேல் போவதில்லை. ஆனால், சூரியனின் வெப்ப ஆற்றல் 15 மில்லியன் டிகிரி சென்டிகிரேடு என்று கணக்கிட்டிருக்கின்றனர். 100 மைல்களுக்கு அப்பால்