உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

பிரிப் பார்கள். மன் என்றால் நினைப்பது என்றும், திரம் என்றால், திரும்பத் திரும்ப என்றும் பொருள்.

அறம் சார்ந்த, திறம் தேர்ந்த நல்ல நினைவுகளைத் திரும் பத் திரும் ப, உச்சரித்து சொல்வதைத்தான் மந்திரம் என்பார்கள்.

இவ்வாறு, உள்ள அரிய மந்திரங்களை உபதேசித்து, மாணவனை அருட்பாலிப்பது. இதற்கு வாசக தீட்சை என்று பெயர். i

7. தனக்கும் மேலான ஒரு சக்தியைப் பற்றி ஆகம நூல்கள் வழியாக தெளிவாகத் தம் மாணவர்களுக்குப் போதிப்பது. அதற்கு சாத்திர தீட்சை என்று பெயர் .

8. தன்னை அடக் கும் திறமை மிகுந்த தேக நெறியாகத் திகழ்வது யோகங்கள். அத்தகைய யோக வழியை மாணவனுக்கு உணர்த்துவது யோக தீட்சை என்று பெயர் .

9. தீ வளர்த்து, அதன் தொடர்பான பல காரியங்களை செய்து, திறனை உணர்த்துவது அவித்ரீ தீட்சை என்று பெயர்.

இவ்வளவு விளக்கமாக, இந்த அறிவுறுத்தும் தீட்சை பற்றி, இங்கே ஏன் கூறியிருக்கிறேன் என்றால், நான் மறையை ஏட் டில் எழுதி, எல்லோருக்கும் சொல் லக் கூடாது என்று மூடிவைத்தவர்களின் முயற்சியை முறியடித்து, பொதுமக்கள் எல்லோரும் புரிந்து கொண்டு, பயன் பெறும் வகையில் வள்ளுவர் எளிதாக, இனிதாகக் குறளை எழுதினார் என்று ஏற்கனவே நீங்கள் படித்திருக்கின்றீர்கள்.

அப் படிப் பட்ட கருத்துக் களையும் இங்கே