பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

துரத் திலே தோன்றி, தரக் கூடிய அத்தனை பயன்களையும், வளங்களையும் வழங்கி, மக்களை மருட் டு கின்ற, விரட் டுகின்ற, மிரட் டுகின்ற தீய சக்திகளையெல்லாம் துரத் தி அடித்துக் காக்கின்ற காரணத்தால் தான், ஆதி பகவன் என்று முதலில் அழைத்தார்.

பகவன் என்றால் கடவுள் என்று அர்த்தம். குரு என்று பொருள். சூரியன் என்று அர்த்தம்.

பகவான் என்றாலும் சூரியன் என்றும், கடவுள் என்றும் பொருள்தான். கடவுள் என்றாலும், பகவன், தெய்வம், குரு என்று தான் அர்த்தம்.

அதனால் தான், சூரியனை பகவன் என்று அழைத்தவர்கள் குரு மார்களை, பயபக்தியோடு அழைத்த பொதுமக்கள் , சூரியபகவான் என்று கூறி, சூரிய வணக்கம் செய்தார்கள்.

மெக்சிகோ மதம் என்று ஒன்று இருந்தது. அமெரிக் காவில் உள்ள மெக்சிகோ தேசத் தவர்களாகிய, ஆதிவாசிகள். அவர்கள் ஆதிகாலத்தில், சூரியனைத்தான் தெய்வமாக பூசித்து வந்தார்கள். (அபிதான சிந்தாமணி பக்கம் 1341)

தன்னை நம் பிய வர்களை, ஒரு நாளும் ஏய்க் காம ல் , கோபித்துத் தீய் க்காமல் , கண் போல காத்து வருவதால்தான், கண்கண்ட தெய்வமாக, கை கொடுக் கும் தெய்வமாக, குரு என்று சூரியனை தெய்வமாக்கி வழிபட்டனர் அக்கால மக்கள்.

சூரியன் துரத்தில் இருந்தாலும், உடல் பூர்வமாக, உணர்வு பூர்வமாக, உயிருக்கு ஆதாரமாக, உடனிருப்பதால் தான், கை குவித்து வணங் கிடும் குருவாகக் கொண்டனர் கற்றோர்கள்.