பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100


தாலேயே அடிகள் புலால் உணவை மேற்கொண்டார். நாச்சுவைக்காக அவர் புலால் உண்ணவில்லை.

இங்கிலாந்தில் வாழ்ந்தபோது கூடத் தாம் தாய்க்கு அளித்த வாக்குறுதியைக் காப்பதற்காகவே புலாலை உண்ணாமல் தவிர்த்திருந்தாராம். பிற்காலத்தில் தாம் சுயமாக வாழும்போது, புலால் உணவு உண்ண வேண்டுமென்று அவர் எண்ணினார். முட்டை மரக்கறி உணவுதான் என்று மேல் நாட்டு அறிஞர்கள் முடிவு செய்திருந்தனர். அதனால் இங்கிலாந்தில் வாழ்ந்தபோது அடிகள் கொஞ்ச நாள் முட்டை சாப்பிட்டு வந்தார். ஆனால் அதுவும் அன்னையின் கருத்துப்படி புலால் உண்வே என்று எண்ணி, அதையும் விட்டு விட்டார்.

இங்கிலாந்தில் மரக்கறி உணவு உண்போர் கழகம் ஒன்று இருந்தது. அடிகள் அதில் உறுப்பினரானார். அதன் செயற்குழு உறுப்பினராகவும் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார். திருவாளர் சார்ட் என்பார் எழுதியுள்ள 'மரக்கறி உணவுக் கொள்கை பற்றிய நியாயம்' (Plea for Vegetarianism) என்ற நூலையும், ஹோவார் வில்லியம்ஸ் என்பார் எழுதியுள்ள 'உணவின் அறம்' (The Ethics of Diet) என்ற நூலையும், டாக்டர் அன்னா கிங்போர்டு என்பார் எழுதியுள்ள 'உணவுக்கொள் கையில் நேரிய முறை' (The Perfect way in Diet) என்ற நூலையும் படிக்கும் வாய்ப்பு அடிகளுக்கு ஏற்பட்டது. இந்நூல்களே அடிகளின் உள்ளத்தை மரக்கறி உணவின்பால் ஈர்த்தன எனலாம்.