பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

புடைய'ராக விளங்கித் 'தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலா'ராக- இல்லறம் நடாத்தினார்.

இல்லறத்தைப் பற்றியும் வாழ்க்கைத் துணை நலத்தைப் பற்றியும் அடிகள் பின்வருமாறு கூறுகிறார்:

'அருளறத்தின் உள்ளுறையை உணர்ந்த பின்னரே என்பாலிருந்த ஐயக்கேடுகள் நீங்கின. மனைவி என்பவள் கணவனின் அடிமையல்ல: வென்றும், அவள் அவனது வாழ்க்கைத் துணையென்றும், தோழியென்றும், இன்ப துன்பத்தில் எல்லா வழியிலுஞ் சம உரிமை உடையாளென்றும், வாழ்வுத் துறையில் தலைவனுக்குள்ள உரிமைகளெல்லாந் தலைவிக்கும் உண்டென்றுந் தெளியலானேன்.'