பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

‘உண்மையறிவிக்கும் உமது கடிதம் பெற்றேன். நானும் அப்பெண்ணும் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம் ; இடிஇடி யென்று சிரித்தோம். நீர் கூறும் பொய்மைக் குற்றம் மன்னிக்கற்பாலதே. ஆனால் உண்மை நிலையை எங்களுக்கு அறிவித்தது நலமேயாகும். உமக்கு நான் அனுப்பிய அழைப்பு இதனால் மாறுபடவில்லை. அடுத்த ஞாயிற்றுக்கிழமை கட்டாயமாக உம்மை எதிர்பார்க்கிறோம். உமது குழந்தை மணத்தை உம் வாயால் கேட்டுச் சிரித்து மகிழ ஆவல் கொண்டிருக்கிறோம். இந் நிகழ்ச்சிகளினால் நமது நட்புரிமை சிறிதும் பாதிக்கப்படவில்லை என்று நான் உறுதி கூறுகிறேன்.’

இக் கடிதத்தைக் கண்டதும் காந்தியடிகள் தம் உள்ளத்திலிருந்து ஒரு பெருஞ்சுமை நீங்கியதாக உணர்ந்தார். அன்றிலிருந்து சமயம் நேரும் போதெல்லாம் தாம் திருமணமானவர் என்பதை வெளியில் சொல்லத் தயங்கியதில்லை.

பள்ளி வாழ்க்கையில் தாம் ஒரு முறைகூடப் பொய் சொன்னதாக நினைவில்லை என்று காந்தியடிகள் கூறுகிறார். ஆனால் பொய் சொல்லியதாக ஒருமுறை தலைமையாசிரியரால் ஒறுக்கப்பட்டார். சனிக்கிழமை நாட்களில் காலை நேரத்தில் மட்டும் பள்ளி உண்டு. மாலையில் நான்கு மணிக்கு விளையாடுவதற்கு மட்டும் செல்லவேண்டும். ஒருநாள் கதிரவனை மேகங்கள் மறைத்திருந்த காரணத்தால் நேரம் தெரியவில்லை. அடிகளிடத்தில் காலத்தை உணர மணிப்பொறியும் இல்லை. எனவே காலம்