பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

யும் அடிகள் படித்தார்; இவ்வாறு பல சமயங்களைப் பற்றியும் நன்கு அறிந்து கொண்டார்.

காந்தியடிகளுக்குத் தென்னாப்பிரிக்காவில் பல கிருத்தவ நண்பர்கள் ஏற்பட்டனர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் திருவாளர் பேகர், ரெவரண்ட் ஆண்ட்ரூ, திருவாளர் டோக், திருவாளர் போலக், திருவாளர் காலன் பேக் என்பவர்கள். இந்தியாவில் அடிகளின் சிறந்த நண்பரான தீன பந்து ஆண்ட்ரூசை அறியாதார் யார்? பிரெஞ்சு நாட்டுப் பேரறிஞரும், அடிகளைப்பற்றி அரிய நூல் எழுதியவருமானரோமன் ரோலண்டு கிருத்தவரே. அடிகளின் அடித் தொண்டராகப்பணியாற்றி வந்த ‘மீராபென்’ என்பவர், ஆங்கில நாட்டைச்சேர்ந்த கிருத்தவப் பெண்மணியே ஆவார். தென்னாப் பிரிக்காவில் வாழ்ந்த கிருத்தவ நண்பர்கள், காந்தியடிகளை எவ்வாறேனும் கிருத்தவ சமயத்தில் சேர்த்துவிட வேண்டுமென்று பெருமுயற்சி செய்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மர்ரே பாதிரியார். அவர் அடிகளைக் கிருத்தவ சமய மாநாடுகட்கெல்லாம் அழைத்துச்சென்றார். ஆனால் எதுவும் அடிகளின் உள்ளத்தை மாற்றவில்லை.

கிருத்தவ நண்பர்கள் காந்தியடிகளைத் தங்கள் சமயத்தில் சேர்த்துக் கொள்ள முயன்றதுபோலவே இசுலாமிய நண்பர்களும் முயற்சி செய்தனர். இசுலாமிய நூல்களைப் படிக்குமாறு அப்துல்லா சேத் அடிக்கடி அடிகளுக்குக் கூறுவார். காந்தியடிகளும் ‘சேல்’ என்பாரின் குர்ஆன் மொழி பெயர்ப்-