பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

“இத்தகைய வைணவனைப் பெற்ற தாயை, நூறு முறை வணங்குவேன். அவனுடைய உடலில், எல்லாப் புண்ணியத் தலங்களும் அடக்கம். அவனை ஒருமுறை காண நேர்ந்தால், நமது எழுபத்தொரு தலை முறையும் கடைத்தேறும்.’

மேற்கூறிய பாடலை எடுத்துக் கூறி, இம்மாதிரியான வைணவனாவதற்கு நான் முயன்று கொண்டிருக்கிறேன்’ என்று கூறுவார். அடிகள் கடைப்பிடித்தொழுகிய சமயத்திற்கு உயிரூட்டிய மற்றொரு குஜராத்திப் பாடல் குறிப்பிடத் தக்கது. அப்பாடல் பின் வருமாறு:

“ஒரு குவளைத் தண்ணிர் கொடுத்தவனுக்கு ஒரு வேளை விருந்தளிக்க வேண்டும்.

“அன்புடன் உன்னே வரவேற்பவனே ஆர்வத்தோடு வணங்க வேண்டும்.

“உனக்கு ஒரு காசு கொடுத்தவனுக்கு ஒரு பொன் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

“உன் உயிரைக் காத்து உதவிய அன்பனுக்குத் திரும்ப உன் உயிரை அளிக்க எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

“இப்படி யெல்லாம் நல்லோர் அறிவுரைகளை மதித்து நடப்பவன் பதின்மடங்கு நன்மை பெறுவான்.

“சான்றோர் எனப்படுவோரின் இலக்கணம் மேலே சொல்லப்பட்டவை மட்டுமன்று. அவர்கள்