பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

எனவே, கோவிலுக்குச் செல்வதில் எனக்கு விருப்பம் உண்டாகவில்லை. நான் கோவிலிலிருந்து பெறக் கூடியது எதுவுமிலதாயிற்று” என்று அடிகள் தம் வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார். இறைவழிபாட்டிற்கமைந்த புனிதமான கோவில்களில், ஆடல் மகளிர் இன்பச்சுவைப் பாடல்களைப் பாடி ஆடல் நிகழ்த்துவது அடிகளுக்குப் பிடிக்கவில்லை. அதனால் வெறுப்படைந்த அடிகள், “கோவில் வேசையரில்லமாகி விட்டது” என்று அஞ்சாமல் கூறினார். இக்கூற்று இந்து சமயவாதிகளுக்குப் பெரிதும் அதிர்ச்சியைக் கொடுத்தது எனலாம்.

1901 ஆம் ஆண்டில் காங்கிரசுக் கட்சியின் அகில இந்திய மாநாடு கல்கத்தாவில் கூடியது. காந்தியடிகளும் அம்மாநாட்டிற்குச் சென்றிருந்தார். மாநாடு முடிவுற்றதும் இராசகோட்டைக்குத் திரும்பும் வழியில் காசி, ஆக்ரா முதலிய பழம் பெரும் ஊர்களைப் பார்த்துவிட்டுச் சென்றார். காசியில் கண்ட காட்சிகள் அவருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தன. புகழ்பெற்ற காசி விசுவ நாதர் கோவிலுக்குச் செல்லும் வழி ஒரு குறுகலான சந்து. கோவிலைச் சுற்றியும் கோவிலுக்குள்ளேயும் அமைதி என்பதே கிடையாது. ஏமாற்றுக்காரர்களான கடைக்காரர்கள் மிட்டாய்களும், புதுமையான விளையாட்டுக் கருவிகளும் விற்றனர். கடைக்காரர்களும் கடைகளில் விலை பேசிய வழிப்போக்கர்களும் பேரிரைச்சலிட்டனர். எங்கும் ஈக்கள் மொய்த்துத் தூய்மையைக் கெடுத்தன. உள்ள ஒருமைப்பாட்டோடு இறைவனை வழிபட அது