பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

‘தொலைந்து போ ! உன் காசு யாருக்கு வேண்டும்’ என்று பண்டா மேலும் திட்டினார்.

‘நமக்கு ஒரு காசு ஆதாயம் ; பண்டாவுக்கு அது இழப்பு’ என்று அடிகள் நினைத்துக்கொண்டு அதைக் கையிலெடுத்தார். ஆனால் பண்டாவா விடுகிறவர்? காந்தியடிகளைக் கூப்பிட்டு, ‘நானும் உன்னைப்போல நடந்து கொள்ளலாமா? அந்தக் காசை ஏற்றுக் கொள்ளாவிட்டால் உனக்குப் பாவமல்லவோ வந்து சேரும்! கொடுத்து விட்டுப் போ!’ என்றார். காந்தியடிகளும் அவ்விதமே கொடுத்து விட்டுத் திரும்பினார். இவற்றையெல்லாம் விரித்துக் கூறிவிட்டுக் காசி யாத்திரையைப் பற்றிக் கடைசியாக அடிகள் எழுதியிருப்பதாவது :

“ஆண்டவன் அருளில் யாருக்கேனும் ஐயமிருக்குமானால், அவர் இத்தகைய புண்ணியத் தலங்கட்குப் போய்ப் பார்ப்பாராக. இறைவன் தன் பெயரால் நடக்கும் எத்துணை அநீதிகளையும், போலி வேடங்களையும் பொறுத்துக் கொண்டிருக்கிறான்! நெடுங்காலத்துக்கு முன்பாகவே, ‘மனிதன் விதைப்பதை அறுக்கிறான்’ என்று ஆண்டவன் திருவாய் மலர்ந்திருக்கிறான். ஊழ் தப்பாமல் வந்து உறுத்தும். ஊழின் பயனைத் துய்க்காமல் தப்ப எவராலும் முடியாது. எனவே, இதில் ஆண்டவனும் பண்டாவும் தலையிடவேண்டிய தேவையே இல்லை. சட்டத்தை இயற்றிவிட்டு ஆண்டவன் அப்புறம் சென்று விட்டான் என்றே கூறலாம்.”

மேற்கண்டவாறு காந்தியடிகள் எழுதி முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் காசி நகரமும்,