பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

விசுவநாதர் ஆலயமும் அதே நிலையில் தாம் காட்சியளிக்கின்றன.

காந்தியடிகள் கோவிலையும் உருவ வழிபாட்டையும்பற்றி மாறுபட்ட கொள்கையுடையவராக இருந்தாலும், அவை அடியோடு சமுதாயத்தை விட்டு ஒழிய வேண்டும் என்பது அவர் கருத்தன்று. ஒருமுறை அடிகள், ‘விசுவபாரதி’யில் குருதேவர் இரவீந்திரநாத தாகூரிடமும், பிஷர் என்ற பாதிரியாரிடமும் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது உருவ வழிபாட்டைப்பற்றியும் கோவில்களைப்பற்றியும் பேச்சு எழுந்தது. குருதேவர் அடிகளை நோக்கி, “காந்திஜி ! இறைவன் கோவிலில் இல்லை. நெற்றி வியர்வை நிலத்தில் விழக் கல்லுடைக்கும் தொழிலாளியிடத்திலும், பாதை அமைக்கும் பாட்டாளியிடத்திலும் அவன் குடியிருக்கிறான். அவர்களோடு வெய்யிலில் வாடுகிறான்; மழையில் நனைகிறான். ஏழையின் ஆடையைப் போல், இறைவனின் ஆடையும் அழுக்குப் படிந்தது. இவ்வுண்மையை உணர்த்துவதற்காகத் தான் ஏசு மனிதனாகப் பிறந்து, மனிதனுக்குரிய இன்ப துன்பங்களை ஏற்றுச் சிலுவையில் மடிந்தார் என்பது பாதிரியாருக்கும் தெரியும். அத்தகைய ஆண்டவனைக் கல்லாக்க என் மனம் ஒருப்பட வில்லை.

“உருவ வழிபாடும் கோவிலும் மனிதனுக்குத் தேவையில்லை என்று எண்ணுகிறேன். நீங்களும் என் கொள்கையை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இக்கொள்கை சரியானதென்றால் உல