பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

யாரும் பணிந்திடும் தெய்வம்—பொருள்
       யாவினும் கின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று—இதில்

      பற்பல சண்டைகள் வேண்டாம்.

இப்பாடல்கள் முறையே நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையவர்களாலும், தேசியக் கவிசுப்பிரமணிய பாரதியாராலும் பாடப்பட்டவை; இப்பாடல்களில் கூறப்படும் கடவுட்கொள்கையே காந்தியடிகளின் கடவுட் கொள்கை. காந்தியடிகளுக்கு அரனும் ஒன்றுதான் அல்லாவும் ஒன்று தான்; பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவும் பரந்தாமனும் ஒன்றே. குறளும் குரானும், கீதையும் கிருத்தவ வேதமும் அவர் சமய நூல்களே. இந்துக்களும், இசுலாமியர்களும், கிருத்தவர்களும் அவர் உடன் பிறந்தவர்களே. இராமனுக்கும் இரகீமுக்கும் அவர் வேறுபாடு கண்டறியார். ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்’ (ஈசுவரன் அல்லா என்பதெல்லாம் உம் பெயரே) என்பது அவரது வழிபாட்டுப் பாடல். அவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது மாதாகோவிலுக்கும், மசூதிக்கும் செல்வார்.

காந்தியடிகள் தம்மை எப்பொழுதும் அரசியல்வாதி என்று கூறிக்கொள்ளமாட்டார்; சமயவாதி என்றே குறிப்பிடுவார் ; தம் வாழ்வில் நடத்திய அரசியல் போராட்டங்களையெல்லாம் சமயத் தொண்டாகவே அவர் குறிப்பிடுவார் ; சத்தியாக்கிரகத்தை வேள்வி என்பார்; நம் நாட்டின் சமயத்தைப்பற்றி நன்குணர்ந்து கொள்ளாதவன், மக்களுக்கு உண்மையான அரசியற் பணியைச் செய்ய