பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


நான் விரும்பவில்லை. ஆகவே அந்த நிகழ்ச்சி இத்துடன் முடிவு பெற்றது.'

காந்தியடிகள் பிரிடோரியாவில் வாழ்ந்த போது வேறொரு குறிப்பிடத்தக்க துன்ப நிகழ்ச்சி அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்டது. பிரிடோரியாவில் காந்தியடிகள் நாள்தோறும் மாலையில் திறந்த வெளியில் உலாவி விட்டுத் திரும்புவார். சாலையின் இருமருங்கிலும் கால் நடையாகச் செல்வோருக்கெனக் கெட்டியான நடைபாதை அமைந்திருந்தது. அடிகள் அப்பாதையின் வழியாகவே மெதுவாக நடந்து செல்வது வழக்கம். பாதையோரத்தில் பிரிடோரியாவின் முதலமைச்சரான திருவாளர் குரூகரின் வீடு அமைந்திருந்தது. அவ்வீடு ஆடம்பரமற்ற சிறிய வீடு. அவ்வீட்டின் வாயிலில் எப்போதும் ஒரு காவற்காரன் நின்று கொண்டிருப்பது வழக்கம்.அதைக் கொண்டே அது ஓர் அமைச்சரின் வீடு என்பதை அறிந்து கொள்வார்கள்.

காந்தியடிகள் நாள்தோறும் அவ்வழியில் செல்வதை, அவ்வீட்டு வாயிலில் நின்றிருந்த காவற்காரன் பரர்த்திருக்கிறான். அப்போதெல்லாம் அடிகளை அவன் ஒன்றும் சொன்னதில்லை. ஒருநாள் புதிய காவல்காரன் ஒருவன் குரூகரின் வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்தான். காந்தியடிகளை அப் பாதையில் கண்ட்புதிய காவற்காரன் பெநஞ்சினம் கொண்டான். 'கறுப்புக் கூலி ஒருவன் நடைபாதையில் நடப்பதா? அதுவும் பேரமைச்சர் இல்லத்தின் முன்பாகவா? என்ன துணிச்சல் இவனுக்கு?'