பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


விளங்கினார் என்பதற்கு ஓரிரு எடுத்துக்காட்டுகள் கூற விரும்புகிறேன். 1917ஆம் ஆண்டு ஒருநாள் மாலை வழி பாட்டை முடித்துக்கொண்டு அடிகள் விடுதிக்கு வந்தார். ஒரு தலையணையைத் தாங்கலாக முதுகுக்கு வைத்துக் கொண்டு நண்பர்களோடு உரையாடத் தொடங்கினார். அன்று குளிர் மிகவும் கடுமையாக இருந்தது. அன்னை கஸ்தூரிபாய் ஒரு வெள்ளைப் போர்வையைக் கொண்டு வந்து அடிகளின் உடலில் போர்த்தார்.சிறிது நேரம் கழிந்ததும் அருகிலிருந்த திருவாளர் ராவ்ஜிபாய் படேல், அடிகளின் உடல்மேல் படிந்திருந்த போர்வையை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார். வெண்மையான அக்கதர்ப் போர்வையில் கருமையான நீண்ட பொருள் ஒன்று தென்பட்டது. உற்றுப் பார்த்ததும் அது ஒரு பாம்பு என்பதை ராவ்ஜி அறிந்து கொண்டார். ராவ்ஜி தம்முடைய போர்வையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்த அடிகள், யாதென வினவினார்.

'ஒன்றுமில்லை பாபு! ஒரு பாம்பு உங்கள் முதுகின் மேல் இருக்கிறது. சற்றுநேரம் ஆடாமல் அசையாமல் அமைதியாக இருங்கள்!' என்று ராவ்ஜி சொன்னார்.

'சரி! அப்படியே இருக்கிறேன்' என்று சொல்லி விட்டு அடிகள் அமைதியாக இருந்தார். பாம்பு முதுகிலிருந்து அவருடைய தோளின் மேல் ஏறியது. மேலே செல்வதற்கு வழி ஏதும் இன்மையால் மீண்டும் முதுகு வழியாகக் கீழே இறங்கியது. அதற்குள்ளாக ராவ்ஜி அப்போர்வையைப் பாம்-