பக்கம்:வள்ளுவர் வழியில் காந்தியம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


தொலைவிலிருந்த ரஸ்டம்ஜியின் வீட்டுக்கு நடந்து செல்லத் தொடங்கினார்.

கப்பலிலிருந்து இறங்கிச் சிறிது தூரம் செல்வதற்குள்ளே வெள்ளைக்காரச் சிறுவர்கள் சிலர் அவரைப் பார்த்து இன்னார் என்று தெரிந்து கொண்டார்கள். உடனே அவர்கள், 'காந்தி! காந்தி!' என்று கூச்சல் போட்டார்கள். அந்தக் கூச்சலைக் கேட்டுவிட்டு நான்கு புறத்திலும் சிறுவர்களும் பெரியவர்களும் ஓடிவரத் தொடங்கினார்கள்.

இதைப் பார்த்ததும் இலாப்டனுக்கு மிகவும் அச்சம் ஏற்பட்டது. கூட்டம் பெரிதாய்விட்டால் தொல்லை - நேரலாம் என்றும், அடிகள் மேலே நடந்து செல்ல முடியாமல் போய்விடலாம் என்றும் எண்ணினார்; ஆகையால் பக்கத்தில் நின்ற ஒரு ரிக்ஷாவைக் கூவி அழைத்தார். மனிதன் இழுக்கும் வண்டியாகிய ரிக்ஷாவில் காந்தியடிகள் ஏறுவதே இல்லை. அச்சமயம் இலாப்டனுடைய வற்புறுத்தலுக்காக அதில் ஏற ஒத்துக்கொண்டார். ஆனால் கூட்டத்தினர் ரிக்ஷாக்காரனை மருட்டித் துரத்தி விட்டார்கள்; இலாப்டனையும் இழுத்துப் புறம் விடுத்தார்கள்; காந்தியடிகளின் மீது கற்களை வீசினார்கள்; கையால் அடிக்கவும் குத்தவும் தொடங்கினார்கள். அடிகளின் உடல் தளர்ந்தது; தலை சுற்றத் தொடங்கியது. கீழே விழுந்து விடாமலிருக்கும் பொருட்டுப் பக்கத்திலிருந்த வீட்டின் முன்புற வேலிக்கம்பிகளைப் பிடித்துக்கொண்டார். அவரைச் சூழ்ந்திருந்த கூட்டம் மேலும் மேலும்