பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 129

கோட்டம் இல்லாமை. அடுத்துச் சொல்லில் கோட்டம் இல்லாமையை அறிக !

  • உள்ளத்தில் கோட்டம் இல்லாமையை ஒருவன் உறுதியாகப் பெற்ருல் நடுவுநிலைமை சொல்லிலும் கோட் டம் இல்லாதது ஆகும். அடுத்துச் செயலிலும் கோட்டம் இல்லாமையைப் பெற வேண்டும்.

செயலுக்குச் சான்ருக வணிகச் செயலைக் கூறினல், *பிறர் பொருளையும் தம் பொருள் போலக் கருத்தொடு, போற்றி வாணிகம் செய்தால் அதுதான் வாணிகம் செய் பவருக்கு நடுவுநிலைமை தவருத வாணிகம் ஆகும்.

இவ்வாறு உள்ளத்தாலும், சொல்லாலும், செயலா லும் கோணமல் வாழ்வதுதான் நடுவுநிலைமை வாழ்வு. அதற்குத் தன்முனைப்புக் கூடாது. தன்னடக்கம் வேண் டும். அந்த அடக்கமும் இதனைப் போலவே உள்ளத்தா லும், சொல்லாலும், செயலாலும் அடங்குவதாகும். அவ் வாறு அடக்கத்தைக் கொண்டால் சான்ருேர் ஆகலாம். நீங்களும் ஆகத்தக்கவர்களே. அன்பும் பண்பும் பெற்ற நீங்கள் நடுவுநிலைமையையும் உணர்ந்துள்ளீர்கள். நாளை அடக்கத்தைப்பற்றி அறிய வருக ! வாழ்க !

  • சொற்கோட்ட மில்லது செப்பம், ஒருதலையா

உள்கோட்டம் இன்மை பெறின்.

  • வாணிகம் செய்வார்க்கு வாணிகம், பேணிப்

பிறவும் தமபோல் செயின்.