பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வாங்கு வாழ்க !

கனிமலர்ப் பரிசு

'மணமக்காள் வாழ்க! வாழும் வகையறிந்து வாழ்க! * வையத்து வாழும் வகையறிந்த வாழ்வால், வானுறையும் தெய்வமாக மதிக்கப்படுவீர்-எ ன் று வாழ்த்தினர் திருவள்ளுவப் பெருந்தகையார்.

அவர் திருமுன்பு தலை வணங்கி நின்ற மணமக்கள் மனம் மகிழ்ந்தனர் ; முகம் மலர்ந்தனர். நாணத்தால் அடிபட்டுக் கவிழ்ந்திருந்த அந்தக் குமரியின் தலை தானே நிமிர்ந்தது. கனிவான குரல் தந்த தமிழ்த் தந்தையின் முகங்கண்டு வணங்க அவளுக்கு அத்துணைப் பேரவா. நிமிர்ந்த நிமிர்ப்பில் மின்னலிட்டது அவளது பொன் ஞெளித் தாமரை முகம். அதை வாய்ப்பாகக் கொண்டு அவளது பேரழகை இமையெனும் கைகளால் அள்ளிச் சுவைத்தான் அந்தக் காளே. எங்கோ ஒதுங்கியிருந்த நாணம் அவள் தலையில் அடித்ததோ என்னவோ பொருளில்லாத புன்னகையோடு மீண்டும் தலைகுனிந் தாள். இதை இடைவேளையாகக் கொண்டு ஏட்டிலும்

- ،.-- .-- .ہمہ سیسہ .....

്.--l. -്.ു.--്~- -l.

字 வையத்துள். வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும். -