பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 11

குமரி கையிலேந்திய ஏட்டை நோக்கிள்ை. கனி' எழுத்துருவத்தில் அந்த ஏட்டில் இருப்பதைக்கண்டாள். அவ்வேட்டிலுள்ள சொற்களையெல்லாம் ப டி த் து நிமிர்ந்தாள்.

ஆம், மகளே, தம்மால் காதலிக்கப்படும் கணவர் அதே அளவு தம்மையும் காதலிக்க வேண்டும். அத்தகைய கணவரைப் பெற்றவரே இன்பச் சுவை என்னும் விதை யில்லாத கனியைப் பெற்றவராவார். நீயும் பெறுக ; பெற்றுத் தடையின்றி இன்புறுக !!-என்ருர் வள்ளுவர்.

அண்டையிலிருந்த அத்தானை ஓரக்கண்ணுல் பார்த் தாள் நங்கை. கண்டுகொண்டாயே கனியை என்றது வள்ளுவரது பார்வை. மகிழ்ந்து பொங்கிளுன் அந்தக் காளே. அந்த மகிழ்ச்சியினிடையே தனக்குமொரு பரிசு கிடைக்கும் என்ற எதிர்நோக்கு மிருந்தது. இடை நேர மின்றி, மகனே, இந்த மலரை என் பரிசாகக் கொள்க ! என்று ஏட்டை நீட்டினர் தந்தை வள்ளுவர். சற்று முன் மனைவிபெற்ற பட்டறிவு மணுளனுக்கு இல்லாமலோ போகும்? மலரொன்று இருக்கும்; எடுத்து மோக்கலாம் என்று எதிர்பார்க்கவில்லை அவன். ஆயினும், மலர் ' என்ற சொல்லாவது இருக்கலாம் என்று ஏட்டைப் பார்த்தான்.

அதேபோதில் வள்ளுவத் தந்தையார் தன் சுட்டு விரலே அந்த ஏட்டின் ஒரு சொல்லிலே நீட்டிக் குறிப்புக் காட்டினர். அந்தக் குறிப்பிலே, மகனே, மலரைத் தானே பார்க்கிருய். அந்த மலர் மிக மென்மையானது. அதைவிட மென்மையான மலரே இல்லை. கூர்ந்து ~:సెసిసిసిసిససిసిసిసిసX,

  • தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர், பெற்ருரே

காமத்துக் காழில் கணி.