பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீய செயலுக்கு அஞ்சுக !

தீய வினை ஒரு செருக்கு

மக்காள், அச்சமின்றிச் சென்று வந்தீர்க ளன்ருே ?

தந்தையே, அச்சம் எங்களை நெருங்கவும் அஞ்சு கிறது. தங்களது தொடர்பு கொண்டு செல்லும் எங் களைப் பயனில்லாத சொல் நெருங்க அஞ்சுகிறது. அதேபோல் தீய செயலும் எங்களை நெருங்க அஞ்சு கிறது. அஞ்சத்தக்கவை எல்லாம் எங்களைக் கண்டு அஞ்சுவதை எண்ணிப் பெருமிதத்தோடு வந்தோம்.'

மகனே, அஞ்சத்தக்கன எல்லாம் அஞ்சுவதை எண்ணிப் பெருமிதம் கொண்டீர்களா ? பெருமிதத்தி லும் அஞ்சத்தக்க பெருமிதம் உண்டு என்பதை அறிவீர் களோ ? மகனே, பெருமிதம் என்ருல் என்ன ?

தந்தையே, உள்ளம் களிப்பால் நிறைந்து விம் முதல் பெருமிதமாகும்.”

அதனைச் செருக்கு என்ற சொல்லாலும் குறிக்க லாம். அச்செருக்கில் நல்ல செருக்கும் உண்டு ; தீய செருக்கும் உண்டு. நல்ல செருக்காக நீ அறிந்தது உண்டே ?!

வ. வா-12.