பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 வள்ளுவர் வாழ்த்து

நல்ல பண்புகளைக் கைக்கொண்ட வாழ்வினருக்கு வள மான செல்வம் இல்லாமல் போக வழியில்லை என்பதை உணர முடிகிறது."

தன்னை விற்றும் கேட்டை வாங்குக

நன்று சொன்னுய் மகனே. ஒப்புரவு என்னும் நல்ல தன்மையைப் பெற்றவன் வறுமையாளன் ஆதல் இல்லை. மாருக ஒப்புரவாளன் வறுமையாளன் ஆதல், அவன் செய்ய வேண்டிய ஒப்புரவுத் தன்மைகளே இயல்புக் கேற்பச் செய்யாது வருந்துகின்றமையால் வந்ததாகும். ஆகவே, முறையாகச் செய்யப்படும் ஒப்புரவால் வறுமை வந்து எய்துவதில்லை. வறுமை மட்டுமன்று, எவ்விதக் கேடும் வருவதில்லை. மகனே, ஒப்புரவாளன் ஊரார்தம் வாழ்விற்கு இன்றியமையாத உதவியைச் செய்பவன்; மகிழ்ச்சி தரும் உதவி யைச் செய்பவன் ; துன்பம் போக் கும் உதவியைச் செய்பவன் ; பொது நலமே தன்னல மாக வாழ்பவன். அத்தகையவன் கேடு பெற்ருல் அவனை அந்த ஊரார் அந்தக் கேட்டிலேயே வைப்பார்களா என்ன ? கேடுவர வகையில்லை. மாருகக் கேடு வந்தது. என்ருல் அது உறுதியாகக் கேடு அன்று. கேடுபோல் தோன்றும் பெருக்கமே ஆகும். ஆகையால் ‘ஒப்புரவி குல் கேடு உண்டாகும் என்ருல், அந்தக் கேடு விலை கொடுத் தும் பெறத்தக்கது. ஒருவன் தன்னை விலைக்கு விற்ருவது அதற்கு விலையாகக் கொடுத்துப் பெற்றுக்கொள்ளும் அளவு பெருமையை உடையது ஆகும். -

  • இட்ைான்கல்கூர்ந்தா ளுதல், செயும்நீர

செய்யா தமைகலா வாறு.

  • ஒப்புரவி ல்ைவரும் கேடெனின் அ.தொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து.