பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 வள்ளுவர் வாழ்த்து

ஈகையால் உண்டாகும் உவப்பை இழப்பது மட்டுமன்று, இல்லறப் பொலிவையும் இழந்தவர் ஆவார் ; இல்லற நெறியையும் அறியாதவர் ஆவார். அத்தகையவர் இரங்கத்தக்க நிலையினர். அவர்தம் உள்ளம் பொருளைச் சேர்க்க அலையும் உள்ளமாகி அமைதியின்றித் துன் புறும் அவர் துன்பமே பெறுவர். ஆகவே. செல் வத்தைச் சேர்த்து நிரப்பிக் கொள்வதற்காக இல்லை : என்போர்க்கு ஈயாமல் தானே தனித்தவராக இருந்து உண்ணுதல் இல்லை என்று இரப்பதைவிடத் (உறுதியாக) துன்பமாகும்.

இறப்பு இனியது

முடிவாகச் சொன்னல், ஈகையின்றேல் இல்லறம் இல்லை எனலாம். இல்லறத்தின் முடிந்த முடிபான தொண்டு ஈகையேயாகும். அந்த ஈகையைச் செய்யக் காத்து நிற்க வேண்டும். ஈகைக்கு வேண்டிய செல் வத்தை முனைந்து, முயன்று ஈட்ட வேண்டும். இல்லை என்ற சொல்லைக் கேட்காமலே உவந்து நின்று குறிப் பறிந்து ஈய வேண்டும். அந்த ஈகை அமைந்த வாழ்வே வாழ்வு. ஈகை அமையாத வாழ்வு ஒரு தாழ்வு. தாழ்வு மட்டுமன்று, ஒரு பெருந் துன்பமும் ஆகும். மகனே, துன்பங்களில் எல்லாம் இறுதித் துன்பமாக மக்கள் எத

னைக் குறிப்பர்?

' தந்தையே, சாதலையே கொடிய துன்பமாக எல் லோரும் குறிப்பர்.'

  • இரத்தலின் இன்னது மன்ற, கிரப்பிய

தாமே தமியர் உணல்.