பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் பெற்று வாழ்க !

உயிருக்கு ஊதியம்

மக்காள், இன்று மணிமுடி சூடி மகிழ வந்துள்ளீர் கள் அன்ருே ? - .

கண்ணம்மா : தந்தையே, இல்லறத்தின் மணிமுடி யாகத் தாங்கள் அறிவிப்பதை உணரும் ஆர்வத்தோடு வந்துள்ளோம்.

கண்ணன் : தாங்கள் மணிமுடியை விளக்கிலுைம் பேறு பெற்றவர்கள் ஆவோம் ; எந்த முடியை சூட்டி குலும் பேறு பெற்றவர்கள் ஆவோம். .

தந்தை : கண்ணனுக்கு மணிமுடியைச் சூடிக் கொள்வதில் உள்ள ஆர்வம் வெளிப்படுகிறது. மகனே, நான் குறிக்கின்ற மணிமுடி பிறரால் எளிதில் செய்து குட்ட முடியாதது ; தாங்களாகவும் எடுத்துச் சூட்டிக் கொள்ள முடியாதது ; தானே வந்து அமைவது. இந்த வியப்பான முடி உடலிலுள்ள தலைக்குச் சூட்டப்படுவ தன்று. உயிருக்குச் குட்டப்படுவது.

கண்ணம்மா : அவ்வாருயின் எங்களுக்கு இரண்டு மடிகள் தேவைப்படா. .