பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வள்ளுவர் வாழ்த்து

பாவையை நோக்குவான ? பெண் பாவையைத் தான் பார்க்கத் துடித்தான் பாவையைப் பார்க்குமுன் பாவை யின் பண்பையன்ருே உணரவேண்டும், என்று அறி வுறுத்த எண்ணினரோ என்னவோ, வள்ளுவர் தொடர்ந்தார்:

மணற்கேணி மனயாள்

கண்ணு, கண்ணுகவும், பேரின்பமாகவும் இருக்கும் மனையாளது உள்ளப் பண்பை உணர்வதே மணுளனுக்கு மாண்பு. மனையாளின் உள்ளப் பண்பை அறிவது என்பது ஒருவகைக் கல்வியாகும். கற்கக் கற்க அறி வைப் பெறலாம். அவ்வறிவால் வாழ்வில் மேம்பாட் டைப் பெறலாம். பழகப்பழக மனையாளது உள்ளப் பண்பை உணரலாம். அவ்வுணர்வால் வாழ்வின் புத் தின்பத்தைப் பெறலாம். ஒருவகையில், மனையாளது உள்ளத்தை ஒரு மணற்கேணி என்று சொல்லலாம். பொதுவாகக் கல்விக்கும் மணற் கேணிக்கும் பலவகையில் ஒத்த தன்மைகள் உண்டு. மணலின்கண் ணமைந்த கேணியின் சீர் தோண்டிய அளவிற்கேற்ப ஊறிப் பெருகும். அதுபோலவே நூற்களைக் கற்கும் அளவிற்கேற்ப அறிவு வளரும். கண்ணு நீ நன்கு கற்றுத் தேர்ந்தவன். மணற் கேணியின் தன்மைகளாக நீ அறிந்தவை யாவை ? சொல்க !' -

' தந்தையே, மணற்கேணி பல நுண்ணிய நீரூற்றுக் களைக் கொண்டது. கைவைத்த அளவில் நீர் ஊறும் ; தொடர்ந்து ஊறும். ஊறஊறத் தோண்டவேண்டும்

SAMMSAS A SAS SSAS SSAS SSAS :్వర్క్ర:

岑 தொட்டனத் துறும் மணற்கேணி, மாந்தர்க்குக்

கற்றனத் துறும் அறிவு.