பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வள்ளுவர் வாழ்த்து

பிறந்த பண்பு புலப்படும். பழகப் பழகப் புதுமையான பண்புகளை அறியலாம்; அவளது உள்ளத்தை உணர லாம்; இன்பத்தையும் பெறலாம். அறியப்பட்ட பண்பும், ! உணரப்பட்ட உள்ளமும், பெற்ற இன்பமும் பெற இருப் பவைகளை நோக்கப் பழையவை. பழகும்வரை அவற்றை அறியவோ, உணரவோ, பெறவோ இயலாது. பழகிய பின்னரோ-'அந்தோ இவளது.பண்புகளையும், உள்ளத் தையும். இவளால் பெறும் இன்பத்தையும் இதுநாள் வரை பெருது போளுேமே என்ற இல்லாமை புலப்படும். அதனுல் அன்பு வேட்கையாம் காமம் சிறக்கும்.

ஆகையால் கண்ணு, "நூற்களைக் கற்றுக் கற்று, நுண்மையாகச் சிந்தித்துச் சிந்தித்து, உண்மைகளே அறிய அறியத் தம் அறியாமையைக் கண்டுகொள்வது போன்றதே. .மனையாள்பால் பயிலப்பயிலப் பண்புகளே அறிவதும், iழகப்பழக உள்ளத்தை உணர்வதும், கூடக் கூடக் களிப்பினைப் பெறுவதுமாகிய காமம். இவ்வகையில் மனையாளாம் சேயிழை இன்பத் தொடர்பால் கல்வி போன்றும் அத்தொடர்பாற் மணற்கேணி போன்றும் அமைபவளாவாள். இத்தகைய பெருந்தகவான எண் ணம் உன்னிடையே நிலவல் வேண்டும். அப்பயிற்சி மிகல் வேண்டும். அப்பயிற்சிதான் உன்னே அந்தச் சிலரில் அமர்த்தும்'-என்னும் அறிவுரையோடு ஒரு புகழ் முடியையும் கண்ணனின் மனையாளுக்குச் சூட்டினர், வள்ளுவப் பேரறிஞர்.

அந்தப் புகழ் முடியைத் தாங்காத அவளது மென் மைத் தலை தாழ்ந்தது. முடிதாங்கிய அத்தலையையும்

AAAAAASAAAA AAAA AAAAMAMAAASAASAASAASAASAASAAAS ്ബ~്. ു്.ം്~്.സ്~~.

  • அறிதோ நறியாமை கண்டற்ருல், காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.